"கொரோனா சேவைக்கு ஆதார் கட்டாயமல்ல" -இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
கொரோனா தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதார் இல்லையெனில் கொரோனா தொடர்பான சேவைகள் மறுக்கப்படுவதாக ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து பெருந்தொற்றுக்காக தடுப்பூசி போடுவதற்கு ஆதார் தவிர அடையாளம் காணக்கூடிய வேறு ஆவணங்களை வழங்கலாம் என ஆணையம் கூறியுள்ளது.
மேலும் ஒருவருக்கு ஆதார் இல்லையெனில் அவருக்கான அத்தியாவசிய சேவைகள் மறுக்கப்படக் கூடாது என்றும் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே கொரோனா தொடர்பான சேவைகளுக்கு ஆதார் கட்டாயமில்லை என்பதுடன், அரசு சேவைகள் மறுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகளிடம் புகார் செய்யலாம் என்றும் அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
Comments