டவ் தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கேரளா, கர்நாடகா , குஜராத் உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநிலங்களை அச்சுறுத்தி வரும் புயல் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் தேசியப் பேரிடர் கால மேலாண்மைத்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.அடுத்த 12 மணி நேரத்தில் டாவ் தே புயல் மேலும் வலுவடைந்து குஜராத்தை நோக்கி நகரும் என்று வானிலை அறிவிப்பு வெளியான நிலையில் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவுகள், கோவா, மகாராஷ்ட்ரா குஜராத் ஆகிய கடலோர மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் தாழ்வான பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
கடல் கொந்தளிப்புகள் அதிகமாக இருப்பதால் நீர்மட்டத்தைக் கண்காணிக்கவும் ஆறுகளில் வெள்ள நிலையை ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடி 9 குழுக்கள் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரை அனுப்பவும் உத்தரவிட்டார்.
Comments