வீட்டு வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைத்த கர்நாடக அமைச்சர்
கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தனது வீட்டு வளாகத்திலேயே 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைத்துள்ளார்.
கர்நாடகத்தின் ஹாவேரி மாவட்டத்தில் சிக்கான் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசவராஜ் பொம்மை கர்நாடக உள்துறை அமைச்சராக உள்ளார்.
மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளதை அடுத்து அமைச்சர் பசவராஜ் பொம்மை சிக்கானில் உள்ள தனது வீட்டு வளாகத்தில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைத்துள்ளார்.
Comments