திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் கள்ளச்சந்தையில் விற்பனை என புகார்
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திர கிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தியாகும் திரவ ஆக்சிஜன் தனியார் நிறுவனத்தின் மூலம் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் 90 சதவீதம் அரசு மருத்துவமனைக்கும் 10 சதவீதம் தனியாருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் அரசு மருத்துவமனைக்கு 50 சதவீதமும் தனியாருக்கு 50 சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த ஆக்சிஜன் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள நம்பியத்தில் இயங்கி வரும் தனியார் ஆலையில் வைத்து பிரித்து எடுக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு சிலிண்டர் 7கிலோ அளவில் நிரப்பபட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இராதாபுரம் வட்டாட்சியர் கனகராஜ் தனியார் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் ஏற்றி கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தனியார் ஆலைக்கு நேரிடையாக சென்றும் ஆய்வு மேற்கொண்டார்.
Comments