தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
அரபிக் கடலில் உருவான புயலின் காரணமாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் 5 நாட்களுக்குக் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கன மழையும், சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களும் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
குமரிக்கடல், மன்னார்வளைகுடா பகுதிகளுக்கு இன்றும், அரபிக் கடல் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
Comments