இந்திய ஆமைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அமெரிக்க இன ஆமைகள்
அமெரிக்க ஆமை இனமானது வட இந்திய நீர்நிலைகளை ஆக்கிரமிக்க தொடங்கியிருப்பதால் இந்திய ஆமை இனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
காது அருகே சிவப்பு நிற பட்டை கொண்ட ஆமைகள் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டவை. வித்தியாசமாகவும், அழகாகவும் இருப்பதால் அமெரிக்க ஆமைகளை வடகிழக்கு மாநிலங்களில் பலரும் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர்.
ஒரு கட்டத்தில் இவற்றை அங்குள்ள நீர்நிலைகளில் அவர்கள் விட்டுச் செல்வதால் அங்கு ஏற்கனவே உள்ள 29 ஆமை இனங்களுக்கு அச்சுறுத்தலாகியுள்ளது.
கிடைக்கும் உணவுகளை வேகமாக சாப்பிடும் அமெரிக்க பூர்வீக ஆமைகள் கர்நாடகா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களிலுள்ள 33 இயற்கை நீர்நிலைகளை ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளது.
Comments