ரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்த செய்திக்குறிப்பில், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் வருவதாகவும், பேரிடர் காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகக்கடுமையான குற்றம் என்றும், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments