சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் புதிய கொரோனா நோயாளகிளை அனுமதிப்பதில் சிக்கல்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் உரிய நேரத்தில் கிடைக்காததால் புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பெரும்புதூரில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஐனாக்ஸ் நிறுவனம், ஆக்சிஜன் முழுவதையும் அரசு மருத்துவமனைகளுக்கே வழங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
இதனால் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரும் நிலைக்குத் தனியார் மருத்துவமனைகள் தள்ளப்பட்டுள்ளன.
ஆக்சிஜன் படுக்கைகள், தீவிரச் சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் முழுவதும் நிரம்பியுள்ளதால் கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் சில மணி நேரங்களில் தீரும் நிலை உள்ளது.
அவசரத் தேவைக்கு சிலிண்டர்களை உடனடியாகக் கொண்டுவந்தாலும் அதுவும் சில மணி நேரங்களில் தீர்ந்துபோகும் நிலை உள்ளது. இதனால் புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை உள்ளது.
Comments