சென்னையில் கொரோனா ஊரடங்கின் போது சுற்றித்திரிந்த 1,700 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் கொரோனா விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 79 வழக்குகள் பதியப்பட்டு, ஆயிரத்து 727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து ஊர் சுற்றியதாக 2 ஆயிரத்து 79 பேர் மீது வழக்கு பதிந்து ஆயிரத்து 727 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் முக கவசம் அணியாமல் வந்ததாக ஆயிரத்து 346 மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்திற்காக 83 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதேபோல் கூடுதல் நேரம் கடை திறந்ததாக 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Comments