அரபிக் கடலில் உருவானது டவ்-தே புயல் : கேரளா, தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை
அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் கன்னூருக்கு மேற்கு- வடமேற்கில் 290 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள டவ்-தே புயல் 24 மணி நேரத்தில் அதிதீவிரப் புயலாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18ம் தேதி காலையில் குஜராத் அருகே புயல் கரையைக் கடக்கும் என்றும், அப்போது 175 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசும் எனவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் புயல் மையம் கொண்டிருப்பதால், கடந்த 2 நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.
திருவனடந்தபுரம், ஆழப்புழா, கொல்லம், எர்ணாகுளம் மாவட்டங்களில் தொடர் மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
கொச்சி உள்ளிட்ட இடங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பல அடி உயரத்திற்கு ராட்சத கடலலைகள் எழும்பி வருகின்றன.
Comments