கொரோனா சிகிச்சைக்கு அடுத்த வாரம் வெளியாகிறது புதிய மருந்து
கொரோனா நோயாளிகளுக்குத் தருவதற்கான புதிய மருந்து ஒன்று அடுத்த வாரம் வெளியாகிறது.
2 டி ஜி என்ற இந்த மருந்து முதல் கட்டமாக பத்தாயிரம் டோஸ்கள் வெளியாக இருப்பதாக பாதுகாப்பு ஆய்வு அமைப்பான டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது.
எதிர்கால பயன்பாட்டிற்காக உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்ப்டடிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை வெகுவாகக் குறைக்கக் கூடிய மருந்து இது என்பதால் தற்போதைய சூழலில் இது நோய் எதிர்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் விரைந்து குணம் பெறவும் இந்த மருந்து உதவும்.
Comments