கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த விபத்து ?
கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் முதலில் பரவியது என்று கூறப்படுவதை நிராகரிக்க முடியாது என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானியான டேவிட் ரெல்மேன் தெரிவித்துள்ளார்.
அவருடைய தலைமையில் விஞ்ஞானிகள் குழு ஒன்று கொரோனா வைரஸ் பரவல் குறித்த ஆய்வை மேற்கொண்டது.
இந்தக் கோட்பாடு தவறானது என்று தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாதவரை இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக சுகாதார அமைப்புடன் சீன விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ஆய்வுக்கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்து இருக்கலாம் என்றும் இது தொடர்பான விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Comments