கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியை வெல்ல இந்தியா தனது முழு பலத்துடன் போராடி வருகிறது - பிரதமர் மோடி

0 3344
கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியை வெல்ல இந்தியா தனது முழு பலத்துடன் போராடி வருகிறது - பிரதமர் மோடி

கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியை வெல்ல இந்தியா தனது முழு பலத்துடன் போராடி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு அரசுத் துறையும் இந்த சவாலை சந்திக்க இரவு பகலாக கடுமையாக உழைத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்நாட்டின் பிரதமர் என்ற முறையில் மக்களின் உயிரிழப்புகள் தம்மை வேதனைப்படுத்துவதாகவும் கடினமான நேரங்களில் இந்தியா நம்பிக்கை இழக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

நிச்சயமாக இந்தப் பேரிடரை வெல்வோம் என்றும் பிரதமர்  உறுதிபடத் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான எட்டாவது தவணை 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நேற்று சுமார் 9 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த பிரதமர் மோடி வழங்கினார்.

சுமார் 20 ஆயிரத்து 667 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments