இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதலில் கேரளப் பெண் உயிரிழப்பு - விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட உடல்

0 4491
இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதலில் கேரளப் பெண் உயிரிழப்பு - விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட உடல்

ஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலின் போது கொல்லப்பட்ட கேரள பெண் சவுமியாவின் உடல் விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டது.

விமான நிலையத்தில் உடலைப்பெற்றுக் கொண்ட வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோனி யெடிடா கிலேன் ஆகியோர் சவுமியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

சவுமியாவின் உடல் கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள அவருடைய சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.

30 வயதான சவுமியா சந்தோஷ் என்பவரை மணந்து இஸ்ரேலில் உள்ள ஆஷ்கிலோன் நகரில் கடந்த ஏழு ஆண்டுகளாக வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்தார். ஹமாஸ் படையினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments