13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

0 4938
13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதன்படி, TNPSC செயலராக இருந்த நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை ஆணையராகவும், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பு வகித்த ராஜாராமன் நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிப்காட் மேலாண் இயக்குநர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராகவும், உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக ஆனந்தகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

TNPL நிர்வாக இயக்குனராக இருந்த சிவசண்முகராஜா, பூம்புகார் ஷிப்பங் கார்ப்பரேஷன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும், தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளராக நீரஜ் மிட்டலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக இருந்த சிவஞானம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், பேரிடர் மேலாண்மை இயக்குனராக சுப்பையன் IAS மற்றும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குனராக ஜெயசீலனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments