கேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டித்து முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு
கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தினந்தோறும் 35ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்ற நிலையில், அதனை தடுக்கும் பொருட்டு, கடந்த 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரிடர் மேலாண்மை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் நடத்திய ஆலோசனையில், முழு ஊரடங்கை வருகிற 23-ந் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் திருவனந்தபுரம், மலப்புரம், திரிச்சூர், எர்ணாகுளம் பகுதியில் மும்மடங்கு ஊரடங்கு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments