யாரும் பசித்திருக்கக் கூடாது... உணவும், துணியும் ரெடி!
இல்லாதவர்கள் கையேந்தும் போது, இருப்பவர்கள் தங்களால் இயன்ற உணவை கொடுத்து உதவலாம், குப்பையில் வீசும் உணவு, ஒருவரின் வயிற்று பசியை போக்கும் . மனிதம் தாண்டி, புனிதம் இல்லை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு அன்பின் பாதை என்ற தொண்டு நிறுவனத்தினர், சாலையோர மக்களின் பசியை போக்கி வருகின்றனர்
கொரோனா தொற்றின் வேகம், தாக்கம் காரணமாக பலர் உயிரிழப்பது மட்டுமின்றி, வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. தொற்று பரவலை தடுக்க, முழு ஊரடங்கு தான் உதவும் என்பது உண்மை. ஆனால்வாழ்வாதாரத்துக்கு தினசரி கூலி தொழிலை நம்பியிருப்பவர்கள், இது போன்ற இக்கட்டான காலக்கட்டத்தில் பசியில் வாடும் சூழலும் உருவாகியுள்ளது.
இது போன்ற நெருக்கடியான நிலையில், பல தொண்டு நிறுவனங்கள் மக்களின் பசியை போக்க களத்தில் குதித்துள்ளது. சென்னை சாந்தோம் பகுதியில், அன்பின் பாதை என்ற தொண்டு நிறுவனம், சாலையோர மக்களின் பசியை போக்க, அவர்களால் முடிந்த தரமான உணவை அலுவலக வாயில் முன்பாக சுடசுட தயார் செய்கின்றனர். பின்னர், சாந்தோம், மெரினா, அடையார், மைலாப்பூர் என 5 கிலோ மீட்டர் சுற்று வட்டராத்தில் உணவு தேவைப்படுவோரை அடையாளம் கண்டு வழங்குகின்றனர்.
இந்த கொரோனா தொற்று ஊரடங்கு வேலையில், மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் இந்த அமைப்பு சார்பாக உணவு வழங்கப்படுகிறது. சாந்தோம் ஆலயம் எதிரில் அலமாரியில் துணிகளும் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் அவற்றைய எடுத்துக் கொள்ளலாம். அதே இடத்தில் பாதுகாப்பான பெட்டியில், உணவு பொட்டலங்களும் வைக்கப்படுகிறது. பசியில் இருப்போர் பசியாறி கொள்ளலாம்.
Comments