தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; விசாரணையின் இடைக்கால அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி அருணா ஜெகதீசன்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி இடைக்கால அறிக்கையை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
துப்பாக்கிச்சூடு வழக்கில் சிக்கிப் படிக்கவும், வேலைக்குச் செல்ல முடியாமல் தவிப்போருக்கு உதவ வேண்டும் என அரசுக்கு ஆணையம் பரிந்துரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments