தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேர் பணியிடமாற்றம்

0 3503
தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேர் பணியிடமாற்றம்

ட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த 13 பேர் உட்பட ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேரைப் புதிய பதவிகளில் தமிழக அரசு நியமித்துள்ளது.

பிரதீப் வி பிலிப் ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் அகாடமி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயந்த் முரளி ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாகவும், மகேஷ் குமார் அகர்வால் சென்னை குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அபாஷ்குமார் பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், ஜெயராம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினகரன் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாகவும், உளவுப் பிரிவு டிஐஜி ராஜேந்திரன், காவல் தொழில்நுட்ப சேவைகள் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments