"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரூ.1 கோடி நிதி
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள், சவுந்தர்யா, ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பொது மக்கள், தொழில் நிறுவனங்கள், திரை பிரபலங்கள், அரசியல் கட்சிகள் நிதி உதவி அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவர் நடத்திவரும் அபெக்ஸ் laboratories நிறுவனம் சார்பில் 1 கோடி ரூபாய் நிதியை, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து வழங்கினார்.
லலிதா ஜூவல்லர்ஸ் நிறுவனர் கிரன்குமாரும், தங்களது நிறுவனம் சார்பில் 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
Comments