திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா செயல்திட்டத்தை மீண்டும் தொடங்க முதலமைச்சர் வேண்டுகோள்

0 5176
திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா செயல்திட்டத்தை மீண்டும் தொடங்க முதலமைச்சர் வேண்டுகோள்

திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா செயல்திட்டத்தை மீண்டும் தொடங்கி, மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் திமுக சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தை மீண்டும் தொடங்கி, மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பேரிடர்க் காலத்தில் களப்பணியாற்றி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.கவினர் கூடுதல் பொறுப்புடனும், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments