தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும், அதேநேரம் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருப்பது வேதனை அளிப்பதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வெளியான தகவலை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் செயல்பாட்டில் இல்லாத மருத்துவமனைகளை புதுப்பித்து தற்காலிக கொரோனா முகாம்களை அமைக்கவும், நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளுடன் முறையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவதை அரசு கண்காணிக்க அறிவுறுத்தினர்.
மேலும் மயானங்களில் சடலங்களை எரிக்க கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்கவும், மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்றக் கோரியும் அறிவுறுத்தி வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
Comments