தமிழ்நாட்டின் அடையாளமாக இந்திய விமானநிலைய ஆணைய ஆவணத்தில் யோகி சிலை : கடும் கண்டனத்தால் நீக்கப்பட்டு இடம்பெற்ற மீனாட்சிஅம்மன் கோவில் கோபுரம்

0 9051
தமிழ்நாட்டின் அடையாளமாக இந்திய விமானநிலைய ஆணைய ஆவணத்தில் யோகி சிலை : கடும் கண்டனத்தால் நீக்கப்பட்டு இடம்பெற்ற மீனாட்சிஅம்மன் கோவில் கோபுரம்

ந்திய விமான நிலையங்கள் ஆணைய ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக இடம்பெற்ற ஜக்கி வாசுதேவின் யோகி சிலை 5 மணி நேரத்தில் நீக்கப்பட்டு மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் கோபுரம் இடம்பெற்றது.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில் மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் பதிவிட்டு அதனை நீக்கவும் வலியுறுத்தி இருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments