கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 19 மாநிலங்களின் 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 19 மாநிலங்களின் 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
வரும் 18 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த இரு கூட்டங்களிலும், மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற உயர்மட்டக்கூட்டத்தில் ஆக்சிஜன் கையிருப்பு, விநியோகம், வெளிநாட்டு மருத்துவ உதவி நிலவரங்களைப் பிரதமர் மோடி ஆய்வு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டங்களில் மாநில அரசுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்தும் தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறித்தும் பிரதமர் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments