அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அறிவிப்பு
அமெரிக்க மக்கள் வீட்டிலும் வெளியிலும் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அந்நாட்டின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பான சிடிசி தெரிவித்துள்ளது.
இரு முறையும் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் கொரோனா காலக் கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் அவர்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் சிடிசி அறிவித்துள்ளது.
பணியிட வழிகாட்டல்கள், பொது இடங்களில் அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்று தேவைப்படும் இடங்களில் அந்தந்த சூழலில் மட்டும் முகக்கவசம் அணியலாம் என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா செல்பவர்களுக்கு பரிசோதனைகள் தேவையில்லை என்றும் அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள கட்டாயம் ஏதுமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வெளிநாட்டில் இருந்து விமானத்தில் பயணிக்கும் முன்பு கொரோனா இல்லை என்ற நெகட்டிவ் சான்றை வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Comments