சட்டக்கல்லூரி மாணவிக்கு மயக்க குளிர்பானம் மன்மத பேராசிரியர் ஓட்டம்..! ஆபத்தான ஆன்லைன் வகுப்பு
நெல்லை சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் ஆன் லைனில் பாடம் நடத்தும் சாக்கில் மாணவியின் செல்போன் நம்பரை பெற்று அவருடன் நட்பாக பழகி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கிற்காக சொந்த ஊருக்கு தனது காரில் அழைத்து செல்வது போல நடித்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டிய வில்லங்க பேராசிரியர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு .
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல பாதி ஆடையுடன் குதிரை மீது அமர்ந்துள்ள இவர் தான் பாலியல் புகாருக்குள்ளாகியுள்ள நெல்லை சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி..!
நெல்லை பாளையங்கோட்டை அரசு சட்டக்கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர், நெல்லை மாநகர காவல் ஆணைய்ரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், பாளையங்கோடை சாந்தி நகரை சேர்ந்த உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி என்பவர் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போது தன்னுடைய செல்போன் நம்பரை தெரிந்துகொண்டு பேசி பழகியதாக தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ஊரடங்கின் போது ஊருக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட போது தானே தனது காரில் வீட்டிற்கு அழைத்துச்செல்வதாக கூறிய ராஜேஷ் பாரதி, மாணவியை நம்ப வைத்து அழைத்துச்சென்றதாகவும் வழியில் குளிர்பாணத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் ஆசைக்கு இணங்கச்சொல்லி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் மாணவி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் , உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி மீது ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசில் புகார் அளிக்கப்பட்டது தெரிந்ததும் தலைமறைவான பிளாக்மெயில் உதவி பேராசிரியரை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டக்கல்லூரி வாசலில் கையில் கத்தியுடன் பிறந்த நாள் கேக் வெட்டியதாக மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளதால், இரு வழக்குகளில் உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
கல்லூரியில் படிக்கின்ற மாணவியிடம் , உதவி பேராசிரியர் ஒருவரே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, அதனை வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments