நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் யுபிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் யுபிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜூன் 27ஆம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிவில் சர்வீஸ் தேர்வின் நேர்காணல் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments