ஏழைகளுக்கு இலவச பிரட் : உதவும் சென்னை பேக்கரி..!

0 3110
ஏழைகளுக்கு இலவச பிரட் : உதவும் சென்னை பேக்கரி..!

சென்னை மாநகரில் தனியார் பேக்கரி நிறுவனம் நாளொன்றுக்கு 500 பிரட் பாக்கெட்டுகளை ஏழைகளுக்கு இலவசமாக விநியோகித்து வருகிறது.

தன்னார்வலர்கள் உதவிக்கு வந்தால், நாளொன்றுக்கு 5 ஆயிரம் ஏழைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கவும் தயாராக உள்ளதாக இப்பேக்கரி நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் உணவு கிடைக்காமல் தவிக்கும் ஏழைகளுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.

அந்த வகையில், சென்னை - பரங்கிமலை பட் ரோட்டில் இயங்கும் கேக் ஸ்கொயர் என்ற பேக்கரி நிறுவனம் கடந்த 10 ஆம் தேதி முதல், இந்த சேவையை துவக்கி உள்ளது.

ஏழைகளுக்கு உதவ தன்னார்வலர்கள் முன் வந்தால் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பிரெட் பாக்கெட்டுகள் வரை தயார் செய்து கொடுக்கவும் தயாராக உள்ளதாக இந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

தன்னார்வலர்கள் துணைக்கு வந்தால், தங்கள் உதவியை மேலும் விரிவுபடுத்தவும் இப்பேக்கரி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

அடுத்தகட்டமாக சாலையோரம் உணவின்றி தவிக்கும் ஏழைகள் 5 ஆயிரம் பேருக்கு ஒரு வேளை உணவு வழங்கவும் தயாராக உள்ளதாக பேக்கரி ஊழியர்கள் தெரிவித்தனர்.

காலை முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும் இந்த பேக்கரியில் வைக்கப்பட்டு இருக்கும் பிரட் பாக்கெட்டுகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக எடுத்து செல்லலாம்.

விருப்ப முள்ளவர்கள் மட்டும் காசு கொடுத்தால் ஊழியர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு கை ஓசை வராது . இரு கைகள் இணைந்து தட்டினால் ஓசை வரும். எனவே, உதவிக்கரம் நீட்டும் தனியார் பேக்கரி நிறுவனத்திற்கு தன்னார்வலர்கள் பெருமளவில் துணை நின்றால், சென்னை மாநகரம் முழுவதும் இதன் பலன்
கிடைக்க வாய்ப்பு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments