தமிழகத்தில் அரசு பேருந்துகளை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸாக மாற்ற ஆலோசனை - போக்குவரத்துதுறை அமைச்சர்
தமிழகத்தில் அரசு பேருந்துகளை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனமாக மாற்ற சுகாதாரத்துறையுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதில், 14வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் 'நிர்பயா' திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்களப்பணியாளர்களுக்கு தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
Comments