சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள்

0 1705
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் கொரோனா நோயாளிகள் ஆம்புல்சில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

1,850 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு  முழுவதும் நிரம்பிவிட்டதால், புறநோயாளிகள் பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, மோசமான  நிலையில் வரும் நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு இருப்பும் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி  மருத்துவமனை கட்டுப்பாட்டில் ,பாரதி மகளிர் கல்லூரியில் 200 படுக்கைகள், ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 60 படுக்கைகள், அத்திப்பட்டு கொரோனா சிகிச்சை மையத்தில் 450 படுக்கைகள் என 2,560 படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

படுக்கைகள் நிரம்பினால் நோயாளிகள் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments