சேலம் அரசு மருத்துவமனையில் நிரம்பிய ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் புதிதாக வரும் நோயாளிகள் அனுமதிக்க இயலாத சூழல்
சேலம் அரசு மருத்துவமனையிலுள்ள 900 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும் நிரம்பிவிட்ட நிலையில், புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் உட்பட அண்டை மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். மருத்துவமனை முன் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆனலோ, இறந்துவிட்டாலோ தான் அடுத்த நோயாளிக்கு அனுமதி கிடைகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சில நோயாளிகளை மேட்டூர், ஓமலூர், ஆத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அதேசமயம், புதிதாக வரும் நோயாளிகளை பரிசோதித்து வேறு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைக்க கூடுதல் மருத்துவர்கள், செல்வியர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Comments