சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஆக்ஸிஜன் முகாம்கள் அமைக்கும் பணி தீவிரம்

0 2534
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஆக்ஸிஜன் முகாம்கள் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில்,
வெளியே தற்காலிகமாக கூடாரம் அமைத்து ஆக்சிஜன் வசதி செய்து கொடுக்கப்படுகிறது.

437 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 190 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் நிரம்பிவிட்ட நிலையில், காலை 6 மணிக்கு வந்த நோயாளிகள், மருத்துவமனை வாசலிலே காத்திருக்கின்றனர்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைக்கு வெளியே கூடாரம் அமைத்து தற்காலிகமாக ஆக்சிஜன் படுக்கைளுடன் முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்குள்ள படுக்கைகளும் நிரம்பிவிட்டதால், கூடுதலாக முகாம்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments