தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை கடைசி நேரத்தில் அனுப்புவதே ஆம்புலன்சிலேயே நோயாளிகள் இறப்பதற்கு காரணம் - அமைச்சர் சேகர்பாபு

0 4167
தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை கடைசி நேரத்தில் அனுப்புவதே ஆம்புலன்சிலேயே நோயாளிகள் இறப்பதற்கு காரணம் - அமைச்சர் சேகர்பாபு

னியார் மருத்துவமனைகள் கடைசி நேரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளை அனுப்பி வைப்பதே ஆம்புலன்சிலேயே நோயாளிகள் இறப்பதற்கு காரணம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை வசதிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைளை குறித்து ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் இதை தெரிவித்தார்.

ஆம்புலன்சில் நோயாளிகள் இறப்பதை தவிர்க்க இந்த மருத்துவமனையில் தற்போது 160 படுக்கைகள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது மேலும் 120 படுக்கைகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments