கோவையில் இ.எஸ்.ஐ, அரசு மருத்துவமனைகளில் முழுவதுமாக நிரம்பிய ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்
கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் இ.எஸ்.ஐ மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அனைத்தும் முழுவதுமாக நிரம்பின.
அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப் பிரிவில் சாதாரண படுக்கைகள் உட்பட மொத்தம் ஆயிரத்து 55 படுக்கைகள் உள்ளன. இதில் ஆக்சிசன் வசதிகொண்ட 717 படுக்கைகள் முழுவதுமாக நிரம்பின.
அதேபோல் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மொத்தமுள்ள 300 ஆக்சிஜன் வசதி படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பிவிட்டன. இதனால் அங்கு அவசர சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மருத்துவமனை வளாகங்களிலேயே காத்திருக்கின்றனர்.
கோவையிலுள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில், முன்பணம் கட்ட சம்மதம் தெரிவிப்பவர்களை மட்டுமே அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Comments