தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேமித்து வைப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 5ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் நேற்று தொடங்கின. முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 5ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அண்டை மாவட்டங்களில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதால், நாள் ஒன்றுக்கு 6 டன் அளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
இதனை சமாளிக்க தஞ்சாவூர் மற்றும் நெல்லை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜனும் நெல்லை வந்து சேர்ந்துள்ளதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஓரளவு கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments