நோயாளிகளால் நிரம்பி வழிகிறது கிண்டி அரசு கொரோனா மருத்துவமனை

0 1316
நோயாளிகளால் நிரம்பி வழிகிறது கிண்டி அரசு கொரோனா மருத்துவமனை

கிண்டி அரசு கொரோனா மருத்துவமனையில் மொத்தம் 550 படுக்கைகள் உள்ள நிலையில், மொத்தமுள்ள198 ஆக்சிஜன் படுக்கைகளும், 102 ஐசியூ படுக்கைகளும் நிரம்பி விட்டன.

250 சாதாரண படுக்கைகளில் ஒற்றை இலக்க எண்ணில் மட்டுமே படுக்கைகள் காலியாக உள்ளன.

இதனால் ஆபத்தான நிலையில் வருபவர்களையும், ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நோயாளிகளையும் அனுமதிக்க முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.

இதனையும் மீறி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அனுமதிக்க ஓரிரு மாற்று படுக்கைகள் தயார் செய்ய நேரம் எடுப்பதால் நோயாளிகள் வெளியில் காத்திருக்கிறார்கள்.

ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments