கடலூர் அருகே பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு
கடலூர் அருகே, பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் சிப்காட்டில், கிரிம்சன் (CRIMSUN) ஆர்கானிக் எனும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த போது, பாய்லர் வெடித்து, தீ விபத்து ஏறட்டது.
விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 20 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3லட்சம் நிதியுதவியும், காயமடைந்த10 பேருக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Comments