உத்தரப் பிரதேசத்தில் புதிய கோவேக்சின் தயாரிப்பு வசதியை ஏற்படுத்த மத்திய அரசு ரூ.30 கோடி நிதியுதவி என தகவல்
உத்தரப் பிரதேச மாநிலம் புலாந்தஷாரில் புதிய கோவேக்சின் தயாரிப்பு வசதியை ஏற்படுத்த மத்திய அரசு 30 கோடி ரூபாய் நிதியுதவி செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொழிற்சாலையில் இருந்து பாரத் பயோடெக் நிறுவனம் மாதந்தோறும் இரண்டு கோடி கோவேக்சின் டோசுகளை உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது.
புலாந்தஷாரில் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு 1989 முதல் ஒரு உற்பத்தி ஆலை உள்ளது. அங்கு போலியோ சொட்டு மருந்து மற்றும் வேறு நோய்தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சில மாநிலங்களில் 18 முதல் 44 வயது பிரிவினருக்கான தடுப்பூசி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Comments