சூயஸ் கால்வாயை விரிவுபடுத்த எகிப்து அரசு திட்டம்..!
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கப்பல் விபத்துக்குப் பின்னர் சூயஸ் கால்வாயை விரிவுபடுத்த எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் அப்துல் பதா எல் சிசி மற்றும் எகிப்து அதிபர் சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி ஆகியோர் பேசும்போது, சூயஸ் கால்வாய் விரிவுபடுத்தப்படுவதாகக் குறிப்பிட்டனர்.
சினாய் தீபகற்பத்தின் ஓரத்தில், கால்வாயின் தெற்கே நீளத்தை கிழக்கே சுமார் 40 மீட்டர் அகலப்படுத்துவது என்றும் தற்போதைய 66 அடி ஆழத்திலிருந்து 72 அடியாக ஆழப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் 19 ஆயிரம் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
Comments