கங்கையில் மிதக்கும் உடல்களால் கொரோனா பரவுமா? நிபுணர்கள் விளக்கம்
கங்கையில் மிதக்கும் உடல்களால் கொரோனா பரவுமா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய கான்பூர் ஐ.ஐ.டி.யின் சுற்றுச்சூழல்துறை பேராசிரியரும், மத்திய அரசின் கங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் தொடர்புடையவருமான சதீஷ் டாரே, தற்போது, கொரோனா காலத்தில் கங்கை ஆற்றில் உடல்களை போடுவது தீவிரமான பிரச்சினைதான் என்றார்.
நீர்நிலையில் உடல்களை போடுவதன் மூலம் நீர்நிலை மாசு அடையும் என்றாலும் தண்ணீர் மூலம் கொரோனா பரவ வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஒருவேளை அவை கொரோனா நோயாளிகளின் உடல்களாக இருந்தாலும், நீரோட்டத்தில் அடித்து வரப்படும்போது கிருமிகள் நீர்த்துப் போய்விடும் என்பதால் இதுபற்றி கவலைப்பட தேவை இல்லை என்றும் கூறினார்.
Comments