தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 5 டன் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆக்சிஜனுடன் புறப்பட்ட லாரியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த லாரி காவல்துறை பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது .
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ஸ்டெர்லைட் ஆலையில் நாளொன்றுக்கு 35 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றார். முதல் மூன்று நாட்கள் 10டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றும், அதன்பின்னர் நாளொன்றுக்கு 35 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
Comments