சென்னை வர்த்தக மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வீரபாபுவுக்கு தமிழக அரசு அழைப்பு

0 4902

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையை கண்காணிக்க சித்த மருத்துவர் வீரபாபு அழைக்கப்ப்டடுள்ளார்.

இவரிடம் கொரோனா சிகிச்சைக்காகச் சென்ற நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கானோர் இவரிடம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில், 1000 படுக்கைகளுடன் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்குமாறு அவருக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

70 சதவீத சித்த மருத்துவத்துடன் 30 சதவீத ஆங்கில மருத்துவத்தையும் கலந்து தாம் சிகிச்சையளிப்பதாக விளக்கினார் வீரபாபு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments