தமிழகத்தில் 30 ஆயிரத்தைக் கடந்தது, கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 293 பேர் பலி
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது . இருந்தபோதிலும் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 508 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது, இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்,
பெருந் தொற்று பாதிப்பிலிருந்து, 19,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் 89 பேர் உள்பட கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 293 பேர் பலியானார்கள்,
சென்னையில் புதிதாக 7564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. செங்கல்பட்டில் 2670 பேரும், கோவையில் 2636 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவள்ளூர் - 1344, மதுரை - 1172 , கன்னியாகுமரி - 1076, ஈரோடு - 961, திருச்சி - 879, காஞ்சிபுரத்தில் 767 , தூத்துக்குடி - 748 , திருநெல்வேலி - 742, திருப்பூர் - 647 தஞ்சாவூர் - 646, மற்றும் திருவண்ணாமலையில் 600 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் -சிறுமிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 91 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், மாநிலம் முழுவதும் 1,72, 735 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments