தனியார் ஸ்கேன் மையங்களை நோக்கி படையெடுக்கும் கொரோனா நோயாளிகள்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய உதவும் சி.டி.ஸ்கேன் எடுக்க, தனியார் ஸ்கேன் மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
ஒவ்வொரு தனியார் ஸ்கேன் மையங்களும் தங்களுக்கென தனியாக ஒரு கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். 4000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை சில இடங்களில் வசூலிக்கப்படுகிறது. சில இடங்களில் மிக குறைவாக 2500 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பெரிய மருத்துவ நிறுவனங்களில் 7000 முதல் 8000 வரையிலும் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், குறைவான கட்டணம் வசூலிக்கும் மையங்களை மக்கள் தேடி அலைகின்றனர்.
கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் CT-SCAN எடுக்க 1500 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரை மட்டுமே செல்வாகும். கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தனியார் ஸ்கேன் மையங்களில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க அரசு உத்தரவிட கோரிக்கை எழுந்துள்ளது.
Comments