சீனாவின் சைனோவாக் கொரோனா தடுப்பு மருந்தின் செயல்திறன் அதிகம்-இந்தோனேசிய சோதனை முடிவில் தகவல்
சீனாவின் சைனோவாக் கொரோனா தடுப்பு மருந்து அதிகச் செயல்திறன் மிக்கது என இந்தோனேசியாவில் நடத்திய சோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் மருத்துவப் பணியாளர்கள் 25 ஆயிரத்து 374 பேருக்கு சைனோவாக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இரண்டாவது தவணை தடுப்பூசி போட்ட 28 நாட்களுக்குப் பின் நடத்திய ஆய்வில் எவரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்பதும், 96 விழுக்காட்டினருக்கு மருத்துவமனைக்குச் செல்லும் நிலை ஏற்படவில்லை என்றும் தெரியவந்தது.
தடுப்பூசி போட்டவர்களில் 94 விழுக்ககாட்டினருக்கு கொரோனா தொற்றவில்லை என்றும் இந்தோனேசிய சுகாதாரத்துறை அமைச்சர் புதி குணாதி சாதிக்கின் தெரிவித்துள்ளார்.
Comments