”12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்”-அமைச்சர்
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னர் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பிளஸ்-2 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமே தவிர ரத்து செய்யப்படாது என்றார்.
Comments