கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்தது பெரிய தவறு-டெல்லி துணை முதலமைச்சர்
கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்தது பெரிய தவறு என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லிக்கு 67 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மருந்தும், 67 லட்சம் டோஸ் கோவாக்சின் மருந்தும் தேவைப்படுவதாகத் தெரிவித்தார். பாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பு மருந்து வழங்க இயலாது எனக் கூறிவிட்டதால், இன்று 100 கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கடிதத்தை டுவிட்டரில் இணைத்துள்ள மணீஷ் சிசோடியா, 6 கோடியே 60 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது மிகப்பெரிய தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments