பெங்களூரில் ஊரடங்கால் வருமானம் இழந்துள்ள ஏழை எளியோருக்கு இலவசமாக உணவளிக்க மாநகராட்சி ஏற்பாடு
பெங்களூரில் ஊரடங்கால் வருமானம் இழந்துள்ள ஏழை எளியோருக்கு மாநகராட்சி சார்பில் ஒரு நாளைக்கு மூன்று லட்சம் உணவுப் பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
பெங்களூரில் 15 இடங்களில் பெரிய சமையற்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பெருமளவில் உணவு சமைத்து ஒருநாளில் காலை, நண்பகல், மாலை என மூன்று வேளையும் தலா ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் 196 இந்திரா உணவகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
அங்கு ஒருவருக்கு அதிகப்பட்சம் 3 பொட்டலங்கள் என்கிற கணக்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Comments