ரெம்டெசிவிர் மருந்து வாங்க 3 நாட்களாக காத்திருக்கும் மக்கள்-முறையாக பதிலளிக்காமல் அலைக்கழிப்பதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு

0 3256
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க மூன்று நாட்களாக மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க மூன்று நாட்களாக மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை பெற நாள்தோறும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மருந்து வாங்க பொதுமக்கள் காத்திருக்கும் சூழலில், சனிக்கிழமை பெயர் கொடுத்தவர்களுக்கே இன்று தான் மருந்து வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து காத்திருக்கும் மக்களுக்கு முறையான பதிலளிக்காமல் அலைக்கழிப்பாதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதிக மருந்துகள் வரவழைத்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments