தேர்தலால் பேரழிவுக்கான விளைவுகள் ஏற்படும் என்பதைத் தேர்தல் ஆணையமும், அரசும் கணிக்கத் தவறிவிட்டன - அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து

0 2439
தேர்தலால் பேரழிவுக்கான விளைவுகள் ஏற்படும் என்பதைத் தேர்தல் ஆணையமும், அரசும் கணிக்கத் தவறிவிட்டன - அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து

தேர்தலால் கொரோனா பேரழிவுக்கான தாக்கம் ஏற்படும் என்பதைத் தேர்தல் ஆணையமும் அரசும் கணிக்கத் தவறிவிட்டதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு வழக்கு விசாரணையின்போது கருத்துத் தெரிவித்த நீதிபதி, உத்தரப்பிரதேசத்தில் ஊரகப்பகுதிகளில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

கொரோனா சூழலில் 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலையும், உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த அனுமதித்தது பேரழிவுக்கான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத் தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றங்களும், அரசும் கணிக்கத் தவறிவிட்டதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments